என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.
Thursday, September 1, 2011
நானும் 'தல'யும் ரிட்டன்ஸ் வித் "மங்காத்தா"
'தல' யும் நானும் ரிட்டன்ஸ்னு டைட்டில் போட காரணம்....
ரொம்ப நாள் ஆகிடுச்சு நான் பதிவு எழுதி...அதை விட தலயோட நடிப்புல இப்படி படம் பாகுரதுல ரொம்ப சந்தோசமா இருக்கு......
மங்காத்தா - படத்தோட விமர்சனம் கீழே...
படத்தோட கதை பதிவுலகில் ஏற்கனவே வெளியிட்டு ரெண்டு நாள் ஆகிடுச்சு....
ஆகையால் நான் படத்தை விமர்சனம் மட்டும் செய்ய போகிறேன்...
முதலில் இயக்குனர் வெங்கட்பிரபு...
நம்ம விளையாடற பெட் மாட்ச படமாக்கி ஜெய்ச்சவர் அப்புறம் சரோஜா,கோவா னு படங்களை இயக்கி முக்கியமாக இளைஞர்கள் மனதில் பதிந்தவர் என்றே சொல்லலாம் இவரை....இப்பொது இயக்கி இருப்பது அஜித்தை வைத்து மங்காத்தா..
படத்தில் இவருடைய பலம் :
௧. வேகமான திரைக்கதை...
௨. நிறைய திருப்பங்கள்
௩. நடிகரின் தனிப்பட்ட திறமைகளுக்கு ஏற்ப திரைக்கதை அமைத்தது...(பைக் சீன் ஓர் உதாரணம்)
௪. படத்தில் நடித்த அணைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது..
௫.தன்னுடைய மேக்கிங்கில் புதிய வித்யாசம் காட்டியது..
௬. இறுதி வரை நாயகனை கெட்டவனாகவே காட்டியது...(கடசில திருந்தலப்பா...வழக்கம் போல )
பலவீனம்:
௧. முதல் பாதியை ரொம்ப நீளமாய் எடுத்தது....
௨.நடிகைகளை படத்தை விட்டு வெகு சீக்கிரமாய் ஓரங்கட்டியது
௩.படத்தில் கிளாமர் காட்சிகளையும்..கெட்ட வார்த்தைகளையும் குறைச்சு இருக்கலாம்...
இரண்டாவாதாய் இசை
௧. படம் ரொம்ப பெரிய ஹிட் ஆக போகுதுனா அதுக்கு மிக பெரிய காரணம் யுவனின் பின்னணி இசை தான்....
௨.விளையாடு மங்காத்தா,மச்சி ஓபன் த பாட்டில் பாட்டு தியேட்டரில் ஆட்டம் போட வாய்த்த பாடல்கள்...
மூன்றாவது கேமரா மற்றும் எடிட்டிங்...
இவங்க மட்டும் ஒழுங்க பண்ணாம இருந்துருந்தா படமே வீனா போயிருக்கும்
அந்த பைக் சீன்,கார் சேசிங் சீன்,ஓபனிங் சீன் எல்லாம் அதற்கு எடுத்துகாட்டு.
நாலாவதாக வெங்கட் பிரபு டீம்
வைபவ்,அரவிந்த் ஆகாஷ்,பிரேம்ஜி இவங்க எல்லாருக்கும் இந்த படம் மிகப்பெரிய பலம்னு சொல்லலாம்..அதுவும் அந்த எஸ்.ஐ.கணேஷ்...கலக்கிடிங்க நீங்க கணேஷ்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்....நம்ம தல....
இப்படி ஒரு தல படம் சான்சே இல்லை...தல ரசிகர்களை தலைநிமிர வைத்துவிட்டிர்கள்...என்னா நடிப்பு,மேனரிசம்..உனக்கு நிகர் நீ தான் தல..!
நடிகன் என்றால் அவன் கதையின் நாயகன் ஆக மட்டும் இருப்பது எனும் இலக்கணத்தை உடைத்து எறிந்து விட்டார் இந்த மனிதர்...தன் ரசிகர் மன்றங்களை கலைத்து எல்லாருக்கும் ஷாக் கொடுத்தவர் தற்போது அதையும் மீறிய ரசிகர்களை பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் மங்காத்தா ---தல தீபாவளி செப்டம்பர் மாதத்தில்...!
Subscribe to:
Posts (Atom)