பிறக்கும் முன் உறைவிடம் கொடுத்து
நான் வாழ உயிர் கொடுத்து
உலகில் என்னை அறிமுகம் செய்த
பெண் பிரம்மா நீ!!
மெதுவாய் எனை தொட்டு பார்த்து
மனமகிழ்ந்தாய் நீ !
வலிக்காமல் கிள்ளிப் பார்த்து
உயிர்மகிழ்ந்தாய் நீ!!
உலகில்
நான் முதன் முதலாய்
விழித்தது அழுதது
பேசியது சிரித்தது
எழுந்தது நடந்தது
முறைத்தது வெட்கப்பட்டது என
என்னுடைய ஒவ்வொரு அசைவையும்
பார்வையால் படம்பிடித்த முதல்
ஒளிப்பதிவாளர் நீ!
உன் தோள்மீதும் மடிமீதும்
சாய்த்தென்னை உறங்கவைக்க
என் பேர் சொல்லி
நீ பாடிய தாலாட்டிடம்
இணை நிற்காது எவ்விசையும்!
விரல் பிடித்து நடைப்பழகினாய்
இசை பிடித்து மொழிப்பழகினாய்
எனக்கு நீ !
உன்னைக் கொண்டு தான்
அன்பெனும் சொல்லை
அகராதியில் படைத்தான் இறைவன்!
நான் முதலாய் பள்ளிக்கு
சென்ற தினத்தில்
பள்ளியறை வரை
நான் அழுத நேரத்தில்
ஆறுதலாய் அன்பை அள்ளி வீசிவிட்டு
பள்ளிவிட்டு வெளியேறி
உன் கண்ணீர் அணை
திறந்துவிட்ட நிமிடங்கள்
உன் அன்பின் அடையாளங்கள்;
சிறுவயதில்
என் விழி அதிகமாய்
தேடுவது உன்னை மட்டுமே!
என் சிறு வலிக்கூட
உன் மனதிற்கு பெரும்வேதனை
கொடுத்திருந்தது;
என் விருப்பத்தை
கேட்காமல் நிறைவேற்றும்
கடவுள் நீ !
உன்னில் பிறந்ததன்றி
வேற்றொரு வரம் பெரியதில்லை!
இதற்கு மேலும்
உன்னை எழுத
தமிழில் வார்த்தை குறைவுகளே!!!
இதுவரை என் கவிகளில்
இதில் கிடைத்தது தான்
என் மனதின் நிறைவுகளே!!!
என்றும் உன் பாதத்தில்
இருக்கும் சொர்க்கத்தை முத்தமிடும்
உன் ஆருயிர் மகன்
மனமகிழ்ந்தாய் நீ !
வலிக்காமல் கிள்ளிப் பார்த்து
உயிர்மகிழ்ந்தாய் நீ!!
உலகில்
நான் முதன் முதலாய்
விழித்தது அழுதது
பேசியது சிரித்தது
எழுந்தது நடந்தது
முறைத்தது வெட்கப்பட்டது என
என்னுடைய ஒவ்வொரு அசைவையும்
பார்வையால் படம்பிடித்த முதல்
ஒளிப்பதிவாளர் நீ!
உன் தோள்மீதும் மடிமீதும்
சாய்த்தென்னை உறங்கவைக்க
என் பேர் சொல்லி
நீ பாடிய தாலாட்டிடம்
இணை நிற்காது எவ்விசையும்!
விரல் பிடித்து நடைப்பழகினாய்
இசை பிடித்து மொழிப்பழகினாய்
எனக்கு நீ !
உன்னைக் கொண்டு தான்
அன்பெனும் சொல்லை
அகராதியில் படைத்தான் இறைவன்!
நான் முதலாய் பள்ளிக்கு
சென்ற தினத்தில்
பள்ளியறை வரை
நான் அழுத நேரத்தில்
ஆறுதலாய் அன்பை அள்ளி வீசிவிட்டு
பள்ளிவிட்டு வெளியேறி
உன் கண்ணீர் அணை
திறந்துவிட்ட நிமிடங்கள்
உன் அன்பின் அடையாளங்கள்;
சிறுவயதில்
என் விழி அதிகமாய்
தேடுவது உன்னை மட்டுமே!
என் சிறு வலிக்கூட
உன் மனதிற்கு பெரும்வேதனை
கொடுத்திருந்தது;
என் விருப்பத்தை
கேட்காமல் நிறைவேற்றும்
கடவுள் நீ !
உன்னில் பிறந்ததன்றி
வேற்றொரு வரம் பெரியதில்லை!
இதற்கு மேலும்
உன்னை எழுத
தமிழில் வார்த்தை குறைவுகளே!!!
இதுவரை என் கவிகளில்
இதில் கிடைத்தது தான்
என் மனதின் நிறைவுகளே!!!
என்றும் உன் பாதத்தில்
இருக்கும் சொர்க்கத்தை முத்தமிடும்
உன் ஆருயிர் மகன்