வெயிலில் நிழலை கொடுத்தேன் நான்
சுத்தமான காற்றை கொடுத்தேன் நான்
எனை நீ வெட்டுவது சரிதானா?
எனை நீ அழிப்பது முறைதானா?
உலகின் வெப்பம் ஏறியதே
காற்றும் மாசாய் மாறியதே
இவைகளின் காரணம் தெரியலையா?
என்னை வெட்டுவது தவறென புரியலையா?
மழைநீர் இப்போ வற்றிவிட்டது
புதிதாய் சுனாமி வந்துவிட்டது
இதற்கும் காரணம் தெரியலையா?
என்னை அழிப்பதாலெனப் புரியலையா?