என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Tuesday, June 16, 2009

குறுங்கவிதைகள்!!


என் உடலில்
எனக்குத் தெரியாமல்
இருவர்
ஒன்று என்னுயிர்
மற்றொன்று அதற்குள்
நீ!




அலைபேசி அழைப்பாய்
மின்னஞ்சல் அரட்டையாய்
தினம் என்னை
சந்திக்கும் நீ
எப்போது காட்டப் போகிறாய்
உன் 'முக'வரி!



உன்னை மாற்றிவிட நானும்
என்னை மாற்றிவிட நீயும்
செய்யும் செயல்களிலாவது
ஒற்றுமையாய் மகிழ்வுறட்டும்
நம் நினைவுகள்!!


2 comments:

  1. நல்லாயிருக்குங்க..! அதவிட உங்க பிளாக் டெம்பிளேட்டும், கலர் சென்ஸ்சும் நல்லாயிருக்கு பாஸூ!!

    ReplyDelete