என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Friday, July 10, 2009

என் கையில்!



சத்யமாக நாளை உலகம்
என் கையில்!

இவற்றை என் கையில்
திணித்தவருக்கு என்னுடைய பதிலை
சொல்ல வெகு நாட்களில்லை!

இவ்வுலகை படித்துக் கொள்ள
அவர் கொடுத்த வாய்ப்புக்கு
கோடி நன்றிகள்!

இதோ!
என் கையிலுள்ள ஆயுதத்தால்
நொருங்கிப் போகும் கல்லைப் போன்று
நாளை உலகை வெல்வேன் என்னறிவால்!

இன்று
நான் இவ்விடம் அடைந்ததைப்போன்று
நாளை வேறு சிறார்
வராமல் தடுப்பேன் என் துணிவினால்!

விரைவில் ஒரு நாள்
சமுதாயம் என்பது நாம் தான்
வேற்றொருவரை கை காண்பித்து
தப்பித்தலாகாது என்பதை
நவீன அநாகரிக உலகிற்கு உணற்றுவேன்!

சத்யமாக உலகம்
நாளை என் கையில்!!!

2 comments:

  1. :)

    இதை படித்ததுன் நான் எப்பவோ படித்த

    பீடி சுற்றுகிறேன் நானும் அம்மாவும்
    அப்பா ஊர் சுற்றுவதால்

    என்ற இக்கால் குறள்(?) நினைவில்

    ReplyDelete
  2. anna ............. ur poems r fantastic ......................... u r absolutely a great legendary poet......... ...... hatssssss offff to u

    ReplyDelete