என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Tuesday, October 25, 2011

ஏழாம் அறிவா - வேலாயுதமா .. ஸ்பெசல் ரிப்போர்ட்!

இந்த தீபாவளி திருவிழா போல் கொண்டாட படவில்லை காரணம் மழை...

எப்போவும் தீபாவளி அன்னைக்கு முன்னாடி நாள் இரவில் மழை பெய்து அடுத்த நாள் வெயில் ஓரளவிற்கு இருக்கும் ஆனால் இந்த முறை பெரும்பாலான இடங்களில் மழை கெடுத்துவிட்டது...!

டி.வி யில் எதாச்சும் பாக்கணும்னா வேட்டைக்காரன் - பாஸ் எ பாஸ்கரன் - அவன் இவன் ( இதுல முதல் இரண்டும் ஓரளவிற்கு தமிழ் நாட்டின் ரசிகர்களுக்கு
பார்வையில் விழுந்த படம் தான்) நல்ல ரிசல்ட் கிடைக்காததால் வீணாய் போன விஷாலின் உழைப்பு தான் அவன் - இவன். விஷால் ஒன்றை கண்ணுடன் நடத்திருக்கும் (நல்லா உழைத்திருக்கும்)படம் இது.மசாலா படம் மட்டும் நடித்து கொண்டிருக்க,அவரிடமும் இப்படி ஒரு நடிப்பு இருப்பதை கண்டுபிடித்த பாலாவுக்கு நன்றிகள்..!

சரி இப்போ நம்ம தலைப்புக்கு போகலாம்...

ஏழாம் அறிவு - பெரிய பட்ஜெட் படம்,பெரிய தயாரிப்பு. இயக்குனர் - ஹீரோ - இசை ஏற்கனவே இந்தியாவை கலக்கிய ''கஜினி'' ஹிட் கொடுத்தவர்கள்.

பெரிய எதிர்பார்ப்பு - அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை என ஏக பிக ஓவர் பில்ட் அப்.. தமிழ் , தமிழனின் உணர்வு என புதிதாய் கோர்க்கப்பட்ட பட விளம்பர வார்த்தைகள்.தமிழன் மார்தட்டி கொள்ளும் அளவிற்கு இந்த படம் இருக்கிறதா...சூர்யாவின் அயராத உழைப்புக்கு சரியான பதில் கிடைத்ததா...முருகதாசின் முயற்சிக்கு கிடைத்த விடை தான் என்ன..?

தயாரிப்பு - பெரிய பட்ஜெட் முதல் பாதியில் வீணடிக்க பட்டு இரண்டாம் பாதியில் காப்பாற்ற படுவதால் படத்தின் மீதான மோகம் சீக்கிரமே குறைந்து விடும்.

இயக்குனர் முதல் பாதியை இரண்டு முறை பார்த்து ரிலீஸ் பன்னிருக்கலாம். இரண்டாம் பாதியில் அவரின் திரைக்கதை அவரையும் அவரின் படத்தையும் தூக்கி நிறுத்துகிறது.இசை இன்னும் கொஞ்சம் உழைச்சிருக்கலாம்... படத்தின் எதிர்பார்ப்பு வீனடிக்கபடவில்லை என்றாலும் தலையில் தூக்கி வைத்து கொள்ளும் அளவிலும் இல்லை...

ஏழாம் அறிவு - இல்லாத அறிவை எதுக்கு கண்டுபிடிக்கிற அறிவு நமக்கு.இருக்குற ஆறறிவையே இன்னும் முழுசா யாரும் இன்னும் பயன்படுத்தல...இன்னும் யோசிங்க பாஸ்..!

அடுத்த படம் - காவலன் மூலம் தன் திரை வரலாறில் திரும்ப கியர் போட்டிருக்கும் 'இளைய தளபதி' விஜயின் தீபாவளி பட்டாசு..!

பால்கார விஜய், அன்பு தங்கை சரண்யா மோகன்,கிளாமர் காதலி ஹன்சிகா மற்றும் சுட்டி ஜர்னலிஸ்ட் ஜெனீலியா..!

வழக்கம் போல் நகரத்தில் நடக்கும் அநியாயம் அதை தட்டி கேட்கும் ஹீரோ அவதாரம்..இது தான் வேலாயுதம் கதை ஆனா படம் பின்னி பெடலேடுதிருக்கிறது.

தனது தம்பியை வைத்து மட்டும் படம் எடுக்கும் ஜெயம் ராஜா முதல் முறை ஒரு வெளி ஹீரோ அதுவும் ஒரு பெரிய ஹீரோ வை இயக்கி அதில் வென்றும் இருக்கிறார்.ஆரம்பத்தில் இருந்தே அவர் படத்தில் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருக்கும் அதை இந்த படத்திலும் கையாண்டு வென்று விட்டார்.

வசனம் எழுதிய சுபாவிற்கு ஒரு கைதட்டல் கொடுத்திடலாம்..!


விஜய் திரும்பவும் தான் ஒரு மாஸ் ஹீரோ தான் என் நிருபித்து இருக்கிறார். விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது தளபதி தீபாவளி தான்.

தியேட்டர் அதிகம் கிடைக்க பெறவில்லை என்றாலும் இந்த படம் வெறும் வெற்றி பெற்று விட்டதாக தகவல் தெரிகிறது.

வேலாயுதம் - வெற்றி பெரும் ஆயுதம்..!

இந்த தீபாவளி திரைப்பட தேர்தலில் ஜெயச்சது நம்ம அணில் விஜய் தான் அவரின் நண்பரான சூர்யா கொஞ்சம் சருக்கிவிட்டார் (அந்த படத்தின் ஓவர் பில்ட் அப் தான் இதற்கு காரணம்) ஓவர் பில்ட் அப் கொடுத்தா கூட்டம் வரும் ஆனா அதே கூட்டம் நாளைக்கு வர போற கூட்டத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் காரணமாக இருக்கும். ஓவர் பில்ட் அப் கொடுத்தாலும் அதில் ஜெயச்ச படம் ' மங்காத்தா' (ஒரே நேரத்தில் தலயும்,தளபதியும் ஜெய்க்கிறாங்க) ஓவர் பில்ட் அப் இல்லனாலும் அம்மா வின் ஆதரவு பெற்ற தால் (ஜெயா டிவில நிமிடத்துக்கு ஒரு முறை ட்ரைளர்) அணில் விஜய் ஜெயத்துவிட்டார்..!

ஏழாம் அறிவு
படம் நெட்டில் வந்துவிட்டதாக தகவல வந்துருக்கு, இவ்ளோ ஸ்பீடா எப்டிடா இருக்கீங்க உங்கள எல்லாம் திட்ட தமிழ் கேட்ட வார்த்தைகள் அனைத்தும் அடங்கிய புத்தகம் படிக்கணும் அத உங்களுக்கு பரிசளிக்கணும்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ஏழாம் அறிவு - உண்மையான திரை விமர்சனம்

1600 வருடத்திற்கு முன்பு போதிதர்மன் என்னும் இளவரசன் இருந்தான் (தற்காப்பு கலை மற்றும் மருத்துவத்தில் திறமைசாலி )அவன் காஞ்சிபுரத்தை சார்ந்தவன் சீனாக்கு செல்கிறான்.பிறகு சீனா கிராமத்தில் வித்தியாசமான நோய் தாக்குகிறது.பின்னர் சூர்யா அந்த நோயை குணப்படுத்தஉதவி புரிகிறார்.அந்த கிராமத்தினர் சூர்யாவை கடவுளாக பார்கின்றனர்.பின்னர் ஒரு குதிரை படையுடன் சிலர் அந்த கிராமத்தை தாக்குகின்றனர் அவர்களிடமிருந்தும் காப்பாற்றும் போதிதர்மன் தற்காப்பு கலையை அவர்களுக்கு கற்பித்து பின் தான் இந்தியா செல்வதாக கூறுகிறான்.அந்த கிராமத்து வாசிகள் அவனுக்கு விஷம் கொடுத்து சாகடிகின்றனர் (அவன் உடல் அவர்கள் பூமியில் புதைக்கபட்டால் அந்த கிராமத்திற்கு எந்த நோயும் வராது )
அவர்களின் எண்ணம் புரிந்த போதிதர்மன் அந்த விஷத்தை தெரிந்தே குடிக்கிறான்.
அங்கு தான் தற்காப்பு கலை மற்றும் மருத்துவம் சீனாவில் வளர்கிறது.

இத்தோடு போதிதர்மன் கதை க்ளோஸ்...

தற்போதைய கதையில் ஏற்கனவே சொன்ன மாறி சூர்யா ஒரு சர்கஸ்
நிபுணர்.அவர் ஸ்ருதி ஹாசன் மேல் காதல் கொள்கிறார்..ஸ்ருதி ஹாசன்
ஒரு விஞ்ஞானி(உண்மையா இப்படி ஒரு லவ் செட ஆகும்).ஸ்ருதி
ஹாசனும் காதல் கொள்கிறார் (வேற வழி இல்ல கத போகணும்ல )
கொஞ்ச நாள் சென்று சூர்யாவின் கிராமத்து ஆட்களின் மூலமாக சூர்யா,ஸ்ருதி தன்னை ஒரு வருடமாக பின் தொடர்வதை தெரிந்து கொள்கிறார்.

அப்புறமா ஏன் என்னும் காரணத்தை கேட்க ஸ்ருதி இடம் கேட்கிறார்
சூர்யா.அதற்கு ஸ்ருதி ,சூர்யா போதிதர்மன் பரம்பரையை சார்ந்தவர் எனவும்
அவரின் ஆராய்ச்சியில் போதிதர்மனின் சக்தியை இந்த சூர்யாவிற்கு கொண்டு வர முடியும்
என் சொல்கிறார்.

அதற்குள் வில்லன் டாங் ஒரு நாய்குள் எதையோ செலுத்துகிறார் அப்புறம் அவன்
கண்களின் சக்தியை கொண்டு அங்கிருக்கும் போலீசை துவம்சம் செய்கிறார்
அதன் சூர்யாவையும் ஸ்ருதியையும் துரத்துகிறார்.சூர்யாவும் ஸ்ருதியும்
அவன் சீனா அரசால் அனுப்பி வைக்கப்பட்டதை கண்டுபிடிக்கிறார்கள்.

அவன் ஒரு நோயை நாய் மூலம் நம் நாட்டுக்கே பரவ விடுகிறான்.
அப்போது தான் இந்திய நாடு தவிக்கும் போது சீனாவால் மருந்து தயாரித்து
கொடுக்க முடியும் (விற்கவும் முடியும்) - இது எப்டினா (போதிதர்மன்
அவர்களுக்கு அதற்கான மருந்தை செய்வது எப்டி என கற்றுகொடுத்திருக்கிறான் அல்லவா..)
அதனால சூர்யாவையும் ஸ்ருதியையும் கொன்னுட்டா அந்த மருந்த சூர்யா
மூலமா ஸ்ருதி தயார் பண்ண முடியாது.

அப்புறம் ஸ்ருதி தன ஆராய்ச்சி மூலமாக சூர்யாவை போதிதர்மனாக மாற்ற
தயார் செய்கிறாள் அங்கே வரும் டாங் சூர்யாவை கிட்டத்தட்ட சாவும் நிலைக்கு
தள்ளினாலும் அந்த நேரத்தில் போதிதர்மன் ஆக்டிவேட் ஆகி
டாங்கை கொள்கிறான்....(ஏழாம் அறிவு முடிஞ்சு போச்சு பா இதோட)

சூர்யா - இவர் தான் இந்த படத்தின் தூண்.சர்கஸ் காட்சிகள் மிக குறைவாக
இருப்பதால் அங்கே அவ்வளவு விஷயம் இல்லை.ஆக்சன் தான்
பயங்கரமா பின்னிருக்கார் மனிதர்.அதுவும் கிளைமாக்ஸ் ல
செமையா தூள் கிளப்பிருக்கார் - ஒரு உண்மையான தற்காப்பு கலை நிபுணர்
போல.

ஸ்ருதி - இரண்டாம் ஹீரோ மாதிரி வேடம் இவருக்கு.அவர் அதை நன்றாக பயன்படுத்தியும்
இருக்கிறார்.நல்ல எதிர்காலம் இருக்கு ம உனக்கு...!

படத்துல மிக மிக முக்கியமான ஆள் வில்லன் தான் ... என்ன
ஒரு மிரட்டலான கண்ணு இவருக்கு.இவரு ஆக்சன் பாத்துட்டே
இருக்கலாம் போல இருக்கு..நல்ல தேர்வு.

படத்தை பற்றி கொஞ்சம் பார்ப்போம்:
முதல் பதினைந்து நிமிடம் - பதினைந்து கோடி ( ஒரு நிமிஷம் ஒரு கோடி (எங்கேயும் எப்போதும் படத்தோட பட்ஜெட்)
அது கண்டிப்பா நிறைவா பிரமாண்ட படுத்தி எடுத்துருக்காங்க..வாழ்த்துக்கள்..!
படத்தை பார்க்கும் அனைவரும் ரசிக்க முடியும் அந்த வரலாறு படைப்பை..!

அப்புறம் படம் ஆரம்பிக்கும் ...முதல் பாதி பார்க்காம படத்தை பார்த்தால்
மிக்க நலம்.ஏன் என்றால் அதில் நாலு பாட்டு அதுல மூணு தேவையே இல்லாம
முதல் பாட்டு சீனப்பாட்டு..அப்புறம் ரிங்க ரிங்கா..அப்புறம் டீ குடிக்கும்
காப்ல முன் அந்தி பாடல் ... அப்புறம் ஒரிரு நிமிடங்களில் எம்மா எம்மா?
முருகதாஸ் மாறி இயக்குனர்கள் இப்படி பாடல்களை தேவை இல்லாமல்
வைப்பது படத்தின் மேல் தானே வெறுப்பை கொண்டு வருகிறது.

படத்தின் இடைவெளியில் போது சிலர் இதுவரைக்கும் சரியில்ல இனிமேல் என்ன எடுத்துருக்க போறான்னு
பேசுனத என் காதில் கேட்க முடிந்தது...முதல் பாதி - வெறி சாரி முருகதாஸ்.

அப்புறம் ஆரம்பிச்ச இரண்டாம் பாதி தான் படத்தின் பக்க பலம்.
ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பு.அடுத்த நிமிடத்தை நோக்கி
நாம் செல்வதை உணரவைக்கும் வேகம்.வில்லன் ஹீரோ,ஹீரோயினை
துரத்துவது தவிர தசவதாரத்திற்கும் அதே கதையோடு
வந்திருக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் தான் மிகவும் என்னை இனி பார்க்க போகும்
உங்களையும் கவரும் ஒரு விஷயம்.இந்த படத்தில் நோக்குவர்மம்
கலை அதாவது ஒருவரின் மூளையை நம் பார்வையை கொண்டு
இயக்குவது.இது படத்தில் போதிதர்மனாலும் வில்லனாலும் அடிக்கடி
படத்தில் யூஸ் பண்றாங்க.

படத்துல நம்மை மாறி ஆட்கள் நம்பாத மாறி ஒரு சீன்.
ரோட்டில் வண்டியை ஓட்டும் மனிதரின் மூளையை வில்லன் இயக்குவது.
நம்ப முடியலனாலும் ஏற்கனவே நம்ப முடியாத நெறைய சீன் பாத்த
நமக்கு இத நம்பிடலாம்.

மொத்தமாக ஏழாம் அறிவு நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது ஆனால்
முதல் பாதியை தவிர்த்து...!

இரண்டாம் பாதிக்காக தான் இந்த படத்துக்கே மார்க் போடுவாங்க..!

கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு தமிழ் மற்றும் இந்தியப் படம்.

ஏழாம் அறிவு - மூன்றை அறிவு தான் இருக்கு (மீதி மூன்றை முதல் பாதி சாப்ட்ருச்சு சரியா )

- நட்புடன் கவித்தோழன்





ஏழாம் அறிவு

ஒரு மனிதனுக்கு ஆறு அறிவு இருக்குனு நாம கேள்வி பட்டதுண்டு ...

அது என்ன ... அந்த அறிவுகளின் நிலை என்ன ...நாம் கொஞ்சம் பார்க்கலாம்..!

1.பார்வை

பார்வை பல்வேறு நிறங்கள், வண்ணச்சாயல்கள், மற்றும் பொலிவிற்காக மின் நரம்பு தூண்டுதல் உருவாக்கும் என்று ஒவ்வொரு கண்ணின் விழித்திரையில் photoreceptors தெரியும் ஒளியின் படங்களை கவனம் மற்றும் கண்டறிய கண் (கள்) திறனை உள்ளன. கம்பிகள் மற்றும் கூம்புகள்: photoreceptors இரண்டு வகைகள் இருக்கின்றன உள்ளன. தண்டுகள் ஒளி மிகவும் முக்கியமான உள்ளன, ஆனால் நிறங்கள் வேறுபடுத்தி இல்லை. கூம்புகள் வண்ணங்கள் வேறுபடுத்திப்பார்க்க, ஆனால் குறைஔ குறைவான உணர்திறன் உள்ளது. இந்த ஒன்று, இரண்டு அல்லது மூன்று புத்தி என்பது என சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன உள்ளது. Neuroanatomists பொதுவாக பல்வேறு வாங்கிகள் நிறம் மற்றும் வெளிச்சத்தை உணர்வு பொறுப்பு என்று கொடுக்கப்பட்ட, இரண்டு உணர்வுகள் என குறிப்பிடுகின்றன. சில வாதிடுகின்றனர் [சான்று தேவை] stereopsis, இரண்டு கண்கள் பயன்படுத்தி ஆழம் உணர்தல், ஒரு உணர்வு என்பது, ஆனால் அது பொதுவாக செயல்பாடு மூளையின் காட்சி கார்டெக்ஸின் (அதாவது, பிந்தைய உணர்ச்சி) ஒரு மனநல கருதப்படுகிறது என்று எங்கு வடிவங்கள் மற்றும் பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் முன்பு கற்று தகவல் அடிப்படையில் விளக்கம் செய்யப்படுகின்றன படங்களில், இந்த காட்சி நினைவகம் என்று அழைக்கப்படுகிறது. பார்க்க முடியாத குருட்டு தன்மை என்று அழைக்கப்படுகிறது.

2.
ஒலி உணர்தல்

கேட்பது(காது) அல்லது தேர்வு ஒலி உணர்தல் உணர்வு உள்ளன. விசாரணை அதிர்வு பற்றி அனைத்து உள்ளது. Mechanoreceptors அகச்செவி அமைக்கப்பட்டுள்ள மின் நரம்பு பருப்பு வகைகள், ஒரு இயக்கம் முறை. இந்த அதிர்வுகளை இயந்திரத்தனமாக முடி போன்ற இழைகள் சிறிய எலும்புகள் ஒரு தொடர் மூலம் செவிப்பறை இருந்து நடத்தப்பட்ட ஏனெனில் ஒலி இருந்து காற்று, கேட்கும் உணர்வு என்று இந்த அதிர்வுகளின் கண்டறிதல்,, ஒரு ஊடகத்தின் மூலமாக பெருகக்கூடிய அதிர்வுகளை ஒரு இயந்திர உணர்வு உள்ளது 20,000 வரை சுமார் 20 ஹெர்ட்ஸ் ஒரு எல்லைக்குள் ஃபைபர்களின் இயந்திரவியல் இயக்கம் கண்டறிய இது உள் காது, ல், [3] தனிநபர்கள் இடையே கணிசமான மாற்றங்களை கொண்டு. உயர் அலைவரிசைகளில் கேட்டு வயது அதிகரிப்பு குறைகிறது. கேட்க முடியாத செவிடு என்று அழைக்கப்படுகிறது. ஒலி கூட tactition உடல் மூலம் நடத்தப்பட்ட அதிர்வுகளை என கண்டறிய முடியும். கேள்வி முடியும் விட குறைவான அதிர்வெண்கள் இந்த வழி கண்டறியப்படலாம்.

3.சுவை

சுவை
(அல்லது, மிகவும் சாதாரண சொல், சுவைத்தல்; பெயரடைக்குரிய வடிவம்: "சுவைசார்") பாரம்பரிய ஐந்து புலன்களின் ஒரு உள்ளது. இது போன்ற உணவு, சில கனிமங்கள், மற்றும் நச்சு பொருட்கள் சுவையை கண்டறியும் திறனை குறிக்கிறது, பல மனிதர்கள் சுவையரும்புகளில் என்று உணர்வு உறுப்புகள் மூலம் சுவை, அல்லது மொழி மேல் பரப்பில் குவிப்பு சுவைசார் calyculi, பெறுகின்றன. இனிப்பளவு, கசப்பு, sourness, saltiness, மற்றும் umami: சுவை உணர்வை ஐந்து அடிப்படை சுவை வகைப்படுத்தலாம்.


4.வாசனை

வாசனை அல்லது நுகர்தல் மற்ற "இரசாயன" உணர்வு உள்ளன. சுவை போலல்லாமல், மோப்பம் வாங்கிகள் நூற்றுக்கணக்கான ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு வசதிக்கு, ஒவ்வொரு பிணைப்பு (388 [4] ஒரு மூல படி) அங்கு உள்ளன. வாசனையை மூலக்கூறுகள் அம்சங்கள் பல்வேறு கொண்டிருக்கின்றன மற்றும், இதனால், அதிக அல்லது குறைந்த கடுமையாக குறிப்பிட்ட ஏற்பிகளுக்கு எக்ஸைட். பல்வேறு வாங்கிகள் இருந்து எக்சிடேடரி சமிக்ஞைகள் இந்த கலவையை நாம் மூலக்கூறு வாசனை வருவது என்ன செய்கிறது. மூளையில், நுகர்தல் மோப்பம் கணினி மூலம் செயல்படுகிறது. மூக்கு உள்ள மோப்பம் வாங்கி நியூரான்கள் அவர்கள் இறந்து ஒரு வழக்கமான அடிப்படையில் மறுஉற்பத்தி என்று மிக மற்ற நியூரான்கள் இருந்து வேறுபடுகின்றன. வாசனை இயலாமை முகர் அழைக்கப்படுகிறது. மூக்கு சில நியூரான்கள் பெரோமொநெஸ் கண்டறிய சிறப்பு உள்ளன. [5]



5.தொடு

டச், என்று அழைக்கப்படும் tactition அல்லது mechanoreception, நாக்கு, தொண்டை, மற்றும் சளி கூட மயிர்க்கால்கள் உட்பட தோல் பொதுவாக, நரம்பியல் வாங்கிகளின் செயல்படுத்தும் விளைவாக ஒரு உணர்வு உள்ளன, ஆனால். அழுத்தம் வாங்கிகள் ஒரு வகையான அழுத்தத்தை மாறுபாடுகள் (நிறுவனம், துலக்குதல், நீடித்த, இன்னபிற) பதிலளிக்க. பூச்சி கடித்தது அல்லது ஒவ்வாமை ஏற்படும் அரிப்பு மற்றும் தொடு உணர்வு தோல் மற்றும் தண்டுவட சிறப்பு அரிப்பு-குறிப்பிட்ட நரம்பணுக்களின் அடங்கும். [6] தொட்டது எதையும் உணர திறன் இழப்பு அல்லது சேதம் தொட்டுணரக்கூடிய மயக்க மருந்து என்று அழைக்கப்படுகிறது. புலன் உணர்ச்சிகளை அளவிற்கு மீறி உணர்தல் கூச்ச உணர்வு, ஊசி குத்துவதற்கு இலக்காகும், அல்லது நரம்பு பாதிப்பு ஏற்படக்கூடும் மற்றும் நிரந்தர அல்லது தற்காலிக இருக்கலாம் என்று தோலின் உணர்வின்மை ஒரு உணர்வு உள்ளது.

6.பகுத்தறிவு

பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து அதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.

இந்த ஆறறிவு இல்லாத ஒரு பெரிய அறிவு ஒன்று உண்டு அது தான் வலி...!

7.வலி

Nociception (உடல் வலி) நரம்பு-சேதம் அல்லது திசு சேதம் சமிக்ஞைகள். வலி வாங்கிகள் மூன்று வகையான சருமம் உள்ளது (தோல்), உடலியலுக்குரிய (மூட்டுகள் மற்றும் எலும்பு), மற்றும் உள்ளுறுப்பு (உடல் உறுப்புகள்). இது முன்பு வலி வெறுமனே அழுத்தம் வாங்கிகளின் ஓவர்லோடிங் என்று நம்பப்படுகிறது, ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆராய்ச்சி அந்த வலி ஒரு தனிப்பட்ட நிகழ்வு இது சுட்டிக்காட்டுகிறது என்று தொட்டு உட்பட மற்ற உணர்வுகளின் அனைத்து intertwines,. வலி முறை முற்றிலும் உள்ளுணர்வு அனுபவம் கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய ஆய்வுகள் வலி மூளையின் முன்புற சிங்குலேட் மேன்மடிப்பு பதிவு என்று காட்ட இருந்தது. [8] வலி முக்கிய செயல்பாடு ஆபத்துக்களை பற்றி எச்சரிக்க உள்ளது. உதாரணமாக, மனிதர்கள் ஒரு கூர்மையான ஊசி அல்லது சூடான பொருள் தொடுதல் அல்லது அது புண்படுத்துகிறது ஏனெனில் ஒரு பாதுகாப்பான எல்லையில்லாமல் ஒரு கையை நீட்டி தவிர்க்க, இதனால் ஆபத்தானது. வலி இல்லாமல், மக்கள் அதை உணராமலேயே பல அபாயகரமான விஷயங்களை செய்ய முடியும்?

இதுவெல்லாம் இல்லாம நம்மகிட்ட இருக்கும் சில அறிவுகள்.

தெரிஞ்சே அடிச்சிட்டு தெரியாத மாறி நிக்கும் வில்லத்தன அறிவு (சின்ன பிள்ளை ல ஆரம்பிச்சு பெரியா ஆள் ஆனா கூட இந்த வில்லத்தனம் நிரம்ப வாழ்கிறவர்கள் மிக நிறைய இருக்கிறார்கள் ) தப்ப தெரியாம செய்வதில் இவர்கள் கில்லாடிகள்..என்றாவது சிக்கிவிடுவார்கள் சிலர் மட்டும் எஸ்கேப்..!

இன்ஸ்டன்ட் பொய் சொல்றது ..சார் நேத்து நைட்லேந்து உடம்புக்கு முடியல சார்,ட்ராபிக்ல மாட்டிகிட்டேன் மா மற்றும் இன்ன பிற பொய்கள்.சத்தியமா சொல்கிறேன் என்று ஆரம்பிக்கும் வார்த்தைகள் அனைத்தும் நிறைய பொய்களை கொண்டது...(யாராச்சும் சத்யம் பண்ணி பேசுனா இனிமே கண்டுபிடிச்சுடுங்க) பொய் தான் சொல்றாங்கன்னு கண்டுபிடிக்க ஒரு சின்ன பழைய டெக்னிக் (உங்க முன்னாடி பேசறவர் கண்ணை பாருங்க அவரால் நீங்கள் அப்படி பாக்கும்போது

அவ்வளவு சுலபமா சொல்லமுடியாது...இத தெரிஞ்சிகிட்டு அவங்க பேசினா அதுக்கு நான் பொறுப்பு ஆகா முடியாது)

பஸ்ஸில் சீட்போடும் அறிவு,படிப்பது போல் நடிக்கும் அறிவு,ஒன்னுக்கு மூணு பொண்ணுங்களோட காதல் பண்ணி (தீராத விளையாட்டு பிள்ளை மாதிரி ) அவங்க மூணு பேரையும் சமாளிக்கும் ரொமான்ஸ் அறிவு,ஆபிசில் வேலை செய்வது போல் பேஸ்புக் கில் சாட் போடும் இணைய அறிவு....!

இப்படி நிறைய ஏழாம் அறிவு நம்மில் கொட்டி கிடக்குது..!

சூர்யா - முருகதாசின் ஏழாம் அறிவு னு நினச்சு உங்கள இங்க வர வச்ச என்னுடைய ஏழாம் அறிவு ( பதிவு அறிவு ) எப்புடினு நீங்க தான் சொல்லணும்...











Wednesday, October 19, 2011

தேர்தல் 'மங்காத்தா' - ஒரு தேர்தல் நடந்து முடிந்தது..!


பொள்ளாச்சி ஐயோ (ஒலிபெருக்கியில் அப்பாடி தாங்க சில நேரம் கேக்குது ) உள்ளாட்சி தேர்தல் தான் நாம கடந்த சில நாட்களாக கொண்டாடிய அட்வான்ஸ் தீபாவளி...!

வாக்காள பெருமக்களே,வாக்காள வள்ளல்களே..! அதையும் மீறி சில பேர்
கொடுத்த காசுக்கு மேல் கூவுனா வாக்காள கடவுள்களே..! (இது தான் வோட்ட போட்டு அஞ்சு வருஷம் வாய முடி சும்மா இருக்கும் மக்களின் தேர்தல் சீசன் பெயர்கள் )

இருபது தெரு மட்டுமே நிக்கும் மெம்பர் கூட நாற்பது பாயிண்டு தேர்தல் அறிக்கை எழுதி அச்சிட்டு கொடுக்கறாங்க...

இந்த தேர்தலில் ஒரு அபூர்வ அறிக்கை ஒன்னு படிச்சேன் மக்களுக்கு இயற்கையின் வளமான சுத்தமான குடிநீர் (அது இபோ பூமிலேயே கிடையாது ),சுத்தமான காற்று மற்றும் சூரிய வெளிச்சத்துடன் கூடிய வீடு கட்டி கொடுக்க படும்...(விடறதுக்கு ஒரு அளவே இல்லாம இயற்கைய கூட கூட்டுக்கு குபிட்றாங்க)

எப்டியும் எதாச்சும் கொடுத்தா கண்டிப்பா நமக்கு தான் வோட்டு போடுவான்னு
எல்லா கட்சி காரங்களும்(சரக்கு,முறுக்கு, சைடு டிஷ் பிரியாணி ) என பலவாறு
கவனித்தார்கள்...

இதுல நம்ம ஆளுங்க கொஞ்சம் உஷார்.. எல்லாரிடமும் போய் முடிந்த அளவு எவ்வளவு ஆட்டைய போட முடியுமோ அவ்ளோ ஆட்டைய போட்டாங்க..!

கடைசி நேர பிரச்சாரம் தான் ஹைலைட்..!

எவன் யாருக்கு வோட்டு கேக்குறான்னு மக்கள்கு குழப்பம் வர அளவுக்கு
எல்லாரும் ஒரே இடத்தில் குழுமி கும்மியடித்தார்கள் (சாரி பாஸ்) வோட்டு கேட்டார்கள்..!

பிரசாரம் முடிஞ்சுருச்சு ... அடுத்தது என்ன ?

நேத்து வேலையிருந்தவன் கூட வீடு விட்டு வெளிய போல காரணம் என்ன தெரியுமா?

அவன் போன நேரத்துல எந்த கட்சி காரனாச்சும் வந்து காசு கொடுக்க இவன் இல்லாம போய்ட்டா ...அவனா மனசார கொடுக்றதும் கெட்டுவிடுமே (மிக பெரிய ஜனநாயக எண்ணம் இது )

எங்க வார்டுல ஆளுங்கட்சி,எதிர்கட்சி, ஆண்ட எதிர்க்கட்சி,பழ கட்சி என ஏழு பேரு போட்டியிட்டாங்க..!

இதுல ஆண்ட எதிர்கட்சி தான் இங்க அதிகமா தேர்தல் பாசனம் பாச்சுனாங்க..!

மற்ற மூணு கட்சி அண்டு ஒரு சுயட்சை னு எங்க ஏரியாவுல ஆளுக்கு சுமார்
ஆயிரம்(ஏன் என்றால் எல்லாருக்கும் கொடுக்காம தேர்ந்தெடுத்து சிலருக்கு மட்டும் கொடுத்ததால் இந்த அமௌன்ட்)

வோட்டுக்கு பணம் வாங்குவது தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திக்கொள்வதர்க்கு சமம் என நான் நினைப்பதாலா? இல்ல,இவன் ஒரு வோட்டு முக்கியமில்லைனு விட்டுட்டாங்களான்னு தெர்ல (உபயம் - என் அம்மா பாரின் போயிருக்காங்க)வீட்டில் இப்போ என் வோட்டு மட்டும் தான்.நமக்கு மட்டும் பாசனத்தில் ஒரு பகுதியும் வரவில்லை( மிக்க மகிழ்ச்சி ..ஏன் என கீழே சொல்றேன்).

இன்று காலை நடந்த சம்பவம்...!

என்னோட பூத் ஸ்லிப் யாரோ எடுத்துகிட்டாங்க...

எங்களுக்கு கடந்த வருடமா தெரிந்தவரும் ஒரு வேட்பாளர் தான் ....

நான் பூத்கு போறதுக்கு முன்னாடி அவரிடம் போய் என் பூத் ஸ்லிப் நம்பர் வாங்கிட்டு பூத்துக்கு போனேன்.

போகும் வழியெங்கும்....

வோட்டு கேட்டு வேட்பாளர்கள் (மினி அண்டு ஸ்பாட் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள் )

எல்லார்டையும் கைய காமிச்சிட்டு ...

லைன்ல நின்னு வோட்டை போட்டேன்...!

யார்ட்டையும் காசு வாங்காததால நமக்கு ஏற்படாமல் போன விஷயம்...

இன்று பலருக்கும் அரங்கேறியது...

அது என்னவா இருக்கும் கீழ இருக்கும் வீடியோ பாத்து தெரிஞ்சிகோங்க..!

http://www.youtube.com/watch?v=O4CeSLtFetc

இந்த தேர்தலில் யார் குழம்பி போனார்களோ இல்லையோ எல்லார்டையும் காசு வாங்கிட்டு யாருக்கு வோட்டு போடறது ... இவன் கிட்ட வாங்கிட்டு இவனுக்கு போடாம விட்ட நாளைக்கு தெருல நின்னு கத்துவானே...அதுவே பெண்களா இருந்தா மானாவாரியா மண்ணு அள்ளி வீசுவாங்க...என்ன நடக்குமோ னு காச
வாங்கிட்டு தூக்கத்துல கனவு வேட்பாளர் திட்ற மாறியே பீல் பண்ற நம் வாக்காள கடவுள்கள் தான்..!

இவ்ளோ காசு வாங்கியும் ..சிலர் வாங்காமலும் வோட்டு போடாமல் வீட்டில்
இருந்தவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ....

தலயோட சிட்டிசன் படத்துல கடசில அந்த மூணு பேருக்கும் கொடுக்கணும்னு தல சொல்ற தீர்ப்பு தான் ...!

எவன் லாம் வோட்டு போடலையோ அவனோட குடிஉரிமைய புடிங்கிடலாம்...!

இத்துடன்

இன்று முடிந்து ...காலமும் காலனும் அனுமதித்தால் நாளை சந்திக்கலாம்...

விரைவில் .... வெட்டு குத்து வெள்ளிகிழமை...!

என்னாட இவன் தேர்தல் மங்காத்தா னு தலைப்பு வச்சிருக்கானே னு நினைத்தவர்களுக்கு ...

மங்காத்தா படத்துல கூட தான் கடைசி சீன்ல அர்ஜுன் சொல்வாரு 'நான் உள்ளே நீ வெளியே' னு அத படம் ஆரம்பிச்ச உடனே காமிச்சிருந்தா படம் பப்படம் ஆகிருக்கும் அது போல தேர்தல் னு சொன்னாலே , பதவிக்கு 'ஒரு ஆள் உள்ளே , ஒரு ஆள் வெளியே " அதானே அர்த்தம்.


நட்புடன் ..கவித்தோழன்