என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Tuesday, October 25, 2011

ஏழாம் அறிவு - உண்மையான திரை விமர்சனம்

1600 வருடத்திற்கு முன்பு போதிதர்மன் என்னும் இளவரசன் இருந்தான் (தற்காப்பு கலை மற்றும் மருத்துவத்தில் திறமைசாலி )அவன் காஞ்சிபுரத்தை சார்ந்தவன் சீனாக்கு செல்கிறான்.பிறகு சீனா கிராமத்தில் வித்தியாசமான நோய் தாக்குகிறது.பின்னர் சூர்யா அந்த நோயை குணப்படுத்தஉதவி புரிகிறார்.அந்த கிராமத்தினர் சூர்யாவை கடவுளாக பார்கின்றனர்.பின்னர் ஒரு குதிரை படையுடன் சிலர் அந்த கிராமத்தை தாக்குகின்றனர் அவர்களிடமிருந்தும் காப்பாற்றும் போதிதர்மன் தற்காப்பு கலையை அவர்களுக்கு கற்பித்து பின் தான் இந்தியா செல்வதாக கூறுகிறான்.அந்த கிராமத்து வாசிகள் அவனுக்கு விஷம் கொடுத்து சாகடிகின்றனர் (அவன் உடல் அவர்கள் பூமியில் புதைக்கபட்டால் அந்த கிராமத்திற்கு எந்த நோயும் வராது )
அவர்களின் எண்ணம் புரிந்த போதிதர்மன் அந்த விஷத்தை தெரிந்தே குடிக்கிறான்.
அங்கு தான் தற்காப்பு கலை மற்றும் மருத்துவம் சீனாவில் வளர்கிறது.

இத்தோடு போதிதர்மன் கதை க்ளோஸ்...

தற்போதைய கதையில் ஏற்கனவே சொன்ன மாறி சூர்யா ஒரு சர்கஸ்
நிபுணர்.அவர் ஸ்ருதி ஹாசன் மேல் காதல் கொள்கிறார்..ஸ்ருதி ஹாசன்
ஒரு விஞ்ஞானி(உண்மையா இப்படி ஒரு லவ் செட ஆகும்).ஸ்ருதி
ஹாசனும் காதல் கொள்கிறார் (வேற வழி இல்ல கத போகணும்ல )
கொஞ்ச நாள் சென்று சூர்யாவின் கிராமத்து ஆட்களின் மூலமாக சூர்யா,ஸ்ருதி தன்னை ஒரு வருடமாக பின் தொடர்வதை தெரிந்து கொள்கிறார்.

அப்புறமா ஏன் என்னும் காரணத்தை கேட்க ஸ்ருதி இடம் கேட்கிறார்
சூர்யா.அதற்கு ஸ்ருதி ,சூர்யா போதிதர்மன் பரம்பரையை சார்ந்தவர் எனவும்
அவரின் ஆராய்ச்சியில் போதிதர்மனின் சக்தியை இந்த சூர்யாவிற்கு கொண்டு வர முடியும்
என் சொல்கிறார்.

அதற்குள் வில்லன் டாங் ஒரு நாய்குள் எதையோ செலுத்துகிறார் அப்புறம் அவன்
கண்களின் சக்தியை கொண்டு அங்கிருக்கும் போலீசை துவம்சம் செய்கிறார்
அதன் சூர்யாவையும் ஸ்ருதியையும் துரத்துகிறார்.சூர்யாவும் ஸ்ருதியும்
அவன் சீனா அரசால் அனுப்பி வைக்கப்பட்டதை கண்டுபிடிக்கிறார்கள்.

அவன் ஒரு நோயை நாய் மூலம் நம் நாட்டுக்கே பரவ விடுகிறான்.
அப்போது தான் இந்திய நாடு தவிக்கும் போது சீனாவால் மருந்து தயாரித்து
கொடுக்க முடியும் (விற்கவும் முடியும்) - இது எப்டினா (போதிதர்மன்
அவர்களுக்கு அதற்கான மருந்தை செய்வது எப்டி என கற்றுகொடுத்திருக்கிறான் அல்லவா..)
அதனால சூர்யாவையும் ஸ்ருதியையும் கொன்னுட்டா அந்த மருந்த சூர்யா
மூலமா ஸ்ருதி தயார் பண்ண முடியாது.

அப்புறம் ஸ்ருதி தன ஆராய்ச்சி மூலமாக சூர்யாவை போதிதர்மனாக மாற்ற
தயார் செய்கிறாள் அங்கே வரும் டாங் சூர்யாவை கிட்டத்தட்ட சாவும் நிலைக்கு
தள்ளினாலும் அந்த நேரத்தில் போதிதர்மன் ஆக்டிவேட் ஆகி
டாங்கை கொள்கிறான்....(ஏழாம் அறிவு முடிஞ்சு போச்சு பா இதோட)

சூர்யா - இவர் தான் இந்த படத்தின் தூண்.சர்கஸ் காட்சிகள் மிக குறைவாக
இருப்பதால் அங்கே அவ்வளவு விஷயம் இல்லை.ஆக்சன் தான்
பயங்கரமா பின்னிருக்கார் மனிதர்.அதுவும் கிளைமாக்ஸ் ல
செமையா தூள் கிளப்பிருக்கார் - ஒரு உண்மையான தற்காப்பு கலை நிபுணர்
போல.

ஸ்ருதி - இரண்டாம் ஹீரோ மாதிரி வேடம் இவருக்கு.அவர் அதை நன்றாக பயன்படுத்தியும்
இருக்கிறார்.நல்ல எதிர்காலம் இருக்கு ம உனக்கு...!

படத்துல மிக மிக முக்கியமான ஆள் வில்லன் தான் ... என்ன
ஒரு மிரட்டலான கண்ணு இவருக்கு.இவரு ஆக்சன் பாத்துட்டே
இருக்கலாம் போல இருக்கு..நல்ல தேர்வு.

படத்தை பற்றி கொஞ்சம் பார்ப்போம்:
முதல் பதினைந்து நிமிடம் - பதினைந்து கோடி ( ஒரு நிமிஷம் ஒரு கோடி (எங்கேயும் எப்போதும் படத்தோட பட்ஜெட்)
அது கண்டிப்பா நிறைவா பிரமாண்ட படுத்தி எடுத்துருக்காங்க..வாழ்த்துக்கள்..!
படத்தை பார்க்கும் அனைவரும் ரசிக்க முடியும் அந்த வரலாறு படைப்பை..!

அப்புறம் படம் ஆரம்பிக்கும் ...முதல் பாதி பார்க்காம படத்தை பார்த்தால்
மிக்க நலம்.ஏன் என்றால் அதில் நாலு பாட்டு அதுல மூணு தேவையே இல்லாம
முதல் பாட்டு சீனப்பாட்டு..அப்புறம் ரிங்க ரிங்கா..அப்புறம் டீ குடிக்கும்
காப்ல முன் அந்தி பாடல் ... அப்புறம் ஒரிரு நிமிடங்களில் எம்மா எம்மா?
முருகதாஸ் மாறி இயக்குனர்கள் இப்படி பாடல்களை தேவை இல்லாமல்
வைப்பது படத்தின் மேல் தானே வெறுப்பை கொண்டு வருகிறது.

படத்தின் இடைவெளியில் போது சிலர் இதுவரைக்கும் சரியில்ல இனிமேல் என்ன எடுத்துருக்க போறான்னு
பேசுனத என் காதில் கேட்க முடிந்தது...முதல் பாதி - வெறி சாரி முருகதாஸ்.

அப்புறம் ஆரம்பிச்ச இரண்டாம் பாதி தான் படத்தின் பக்க பலம்.
ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பு.அடுத்த நிமிடத்தை நோக்கி
நாம் செல்வதை உணரவைக்கும் வேகம்.வில்லன் ஹீரோ,ஹீரோயினை
துரத்துவது தவிர தசவதாரத்திற்கும் அதே கதையோடு
வந்திருக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் தான் மிகவும் என்னை இனி பார்க்க போகும்
உங்களையும் கவரும் ஒரு விஷயம்.இந்த படத்தில் நோக்குவர்மம்
கலை அதாவது ஒருவரின் மூளையை நம் பார்வையை கொண்டு
இயக்குவது.இது படத்தில் போதிதர்மனாலும் வில்லனாலும் அடிக்கடி
படத்தில் யூஸ் பண்றாங்க.

படத்துல நம்மை மாறி ஆட்கள் நம்பாத மாறி ஒரு சீன்.
ரோட்டில் வண்டியை ஓட்டும் மனிதரின் மூளையை வில்லன் இயக்குவது.
நம்ப முடியலனாலும் ஏற்கனவே நம்ப முடியாத நெறைய சீன் பாத்த
நமக்கு இத நம்பிடலாம்.

மொத்தமாக ஏழாம் அறிவு நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது ஆனால்
முதல் பாதியை தவிர்த்து...!

இரண்டாம் பாதிக்காக தான் இந்த படத்துக்கே மார்க் போடுவாங்க..!

கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு தமிழ் மற்றும் இந்தியப் படம்.

ஏழாம் அறிவு - மூன்றை அறிவு தான் இருக்கு (மீதி மூன்றை முதல் பாதி சாப்ட்ருச்சு சரியா )

- நட்புடன் கவித்தோழன்





3 comments:

  1. well written and analyzed the movie in a good manner....

    ReplyDelete
  2. ur Ideas may be nice, but the organization is not complete in the review. Better improve the language.

    -Aba

    ReplyDelete