இந்த தீபாவளி திருவிழா போல் கொண்டாட படவில்லை காரணம் மழை...
எப்போவும் தீபாவளி அன்னைக்கு முன்னாடி நாள் இரவில் மழை பெய்து அடுத்த நாள் வெயில் ஓரளவிற்கு இருக்கும் ஆனால் இந்த முறை பெரும்பாலான இடங்களில் மழை கெடுத்துவிட்டது...!
டி.வி யில் எதாச்சும் பாக்கணும்னா வேட்டைக்காரன் - பாஸ் எ பாஸ்கரன் - அவன் இவன் ( இதுல முதல் இரண்டும் ஓரளவிற்கு தமிழ் நாட்டின் ரசிகர்களுக்கு
பார்வையில் விழுந்த படம் தான்) நல்ல ரிசல்ட் கிடைக்காததால் வீணாய் போன விஷாலின் உழைப்பு தான் அவன் - இவன். விஷால் ஒன்றை கண்ணுடன் நடத்திருக்கும் (நல்லா உழைத்திருக்கும்)படம் இது.மசாலா படம் மட்டும் நடித்து கொண்டிருக்க,அவரிடமும் இப்படி ஒரு நடிப்பு இருப்பதை கண்டுபிடித்த பாலாவுக்கு நன்றிகள்..!
சரி இப்போ நம்ம தலைப்புக்கு போகலாம்...
ஏழாம் அறிவு - பெரிய பட்ஜெட் படம்,பெரிய தயாரிப்பு. இயக்குனர் - ஹீரோ - இசை ஏற்கனவே இந்தியாவை கலக்கிய ''கஜினி'' ஹிட் கொடுத்தவர்கள்.
பெரிய எதிர்பார்ப்பு - அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை என ஏக பிக ஓவர் பில்ட் அப்.. தமிழ் , தமிழனின் உணர்வு என புதிதாய் கோர்க்கப்பட்ட பட விளம்பர வார்த்தைகள்.தமிழன் மார்தட்டி கொள்ளும் அளவிற்கு இந்த படம் இருக்கிறதா...சூர்யாவின் அயராத உழைப்புக்கு சரியான பதில் கிடைத்ததா...முருகதாசின் முயற்சிக்கு கிடைத்த விடை தான் என்ன..?
தயாரிப்பு - பெரிய பட்ஜெட் முதல் பாதியில் வீணடிக்க பட்டு இரண்டாம் பாதியில் காப்பாற்ற படுவதால் படத்தின் மீதான மோகம் சீக்கிரமே குறைந்து விடும்.
இயக்குனர் முதல் பாதியை இரண்டு முறை பார்த்து ரிலீஸ் பன்னிருக்கலாம். இரண்டாம் பாதியில் அவரின் திரைக்கதை அவரையும் அவரின் படத்தையும் தூக்கி நிறுத்துகிறது.இசை இன்னும் கொஞ்சம் உழைச்சிருக்கலாம்... படத்தின் எதிர்பார்ப்பு வீனடிக்கபடவில்லை என்றாலும் தலையில் தூக்கி வைத்து கொள்ளும் அளவிலும் இல்லை...
ஏழாம் அறிவு - இல்லாத அறிவை எதுக்கு கண்டுபிடிக்கிற அறிவு நமக்கு.இருக்குற ஆறறிவையே இன்னும் முழுசா யாரும் இன்னும் பயன்படுத்தல...இன்னும் யோசிங்க பாஸ்..!
அடுத்த படம் - காவலன் மூலம் தன் திரை வரலாறில் திரும்ப கியர் போட்டிருக்கும் 'இளைய தளபதி' விஜயின் தீபாவளி பட்டாசு..!
பால்கார விஜய், அன்பு தங்கை சரண்யா மோகன்,கிளாமர் காதலி ஹன்சிகா மற்றும் சுட்டி ஜர்னலிஸ்ட் ஜெனீலியா..!
வழக்கம் போல் நகரத்தில் நடக்கும் அநியாயம் அதை தட்டி கேட்கும் ஹீரோ அவதாரம்..இது தான் வேலாயுதம் கதை ஆனா படம் பின்னி பெடலேடுதிருக்கிறது.
தனது தம்பியை வைத்து மட்டும் படம் எடுக்கும் ஜெயம் ராஜா முதல் முறை ஒரு வெளி ஹீரோ அதுவும் ஒரு பெரிய ஹீரோ வை இயக்கி அதில் வென்றும் இருக்கிறார்.ஆரம்பத்தில் இருந்தே அவர் படத்தில் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருக்கும் அதை இந்த படத்திலும் கையாண்டு வென்று விட்டார்.
வசனம் எழுதிய சுபாவிற்கு ஒரு கைதட்டல் கொடுத்திடலாம்..!
விஜய் திரும்பவும் தான் ஒரு மாஸ் ஹீரோ தான் என் நிருபித்து இருக்கிறார். விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது தளபதி தீபாவளி தான்.
தியேட்டர் அதிகம் கிடைக்க பெறவில்லை என்றாலும் இந்த படம் வெறும் வெற்றி பெற்று விட்டதாக தகவல் தெரிகிறது.
வேலாயுதம் - வெற்றி பெரும் ஆயுதம்..!
இந்த தீபாவளி திரைப்பட தேர்தலில் ஜெயச்சது நம்ம அணில் விஜய் தான் அவரின் நண்பரான சூர்யா கொஞ்சம் சருக்கிவிட்டார் (அந்த படத்தின் ஓவர் பில்ட் அப் தான் இதற்கு காரணம்) ஓவர் பில்ட் அப் கொடுத்தா கூட்டம் வரும் ஆனா அதே கூட்டம் நாளைக்கு வர போற கூட்டத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் காரணமாக இருக்கும். ஓவர் பில்ட் அப் கொடுத்தாலும் அதில் ஜெயச்ச படம் ' மங்காத்தா' (ஒரே நேரத்தில் தலயும்,தளபதியும் ஜெய்க்கிறாங்க) ஓவர் பில்ட் அப் இல்லனாலும் அம்மா வின் ஆதரவு பெற்ற தால் (ஜெயா டிவில நிமிடத்துக்கு ஒரு முறை ட்ரைளர்) அணில் விஜய் ஜெயத்துவிட்டார்..!
ஏழாம் அறிவு படம் நெட்டில் வந்துவிட்டதாக தகவல வந்துருக்கு, இவ்ளோ ஸ்பீடா எப்டிடா இருக்கீங்க உங்கள எல்லாம் திட்ட தமிழ் கேட்ட வார்த்தைகள் அனைத்தும் அடங்கிய புத்தகம் படிக்கணும் அத உங்களுக்கு பரிசளிக்கணும்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
super,,,,,, thalapathy rockzzzzzzzzzzzzz
ReplyDeletevijay rocksssssssssss
ReplyDeletethalapathy VijaY maasssssssssss.....,,,,,,,
ReplyDelete