மயக்கம் என்ன..? மயக்கியதா..திரை விமர்சனம்..!
ஒரு கனவு அதுவும் கற்பனை திறமை கனவு அதுக்காக பெரிய போராட்டம்,அந்த கனவின் கற்பனை திருடப்பட்டு அது வேறு ஒருவருக்கு ஏணியாக மாறினாலும் அந்த கனவை விடாமுயற்சியுடன் அடையும் ஒரு போட்டோகிராபரின் கதை தான் இந்த..மயக்கம் என்ன..?
அந்த கனவை அடைய அவருக்கு தேவைப்பட்டது விட்டு கொடுக்காத நாலு நண்பர்கள் மற்றும் ஒர் அழகிய ராட்சசி மனைவி.
படத்தின் கதை :
கார்த்திக்(தனுஷ்),சுந்தர் இருவரும் நண்பர்கள் அவர்களின் நட்பு வட்டத்தின் வந்து சேருகிறாள் யாமினி (ரிச்சா).யாமினியை எப்படியோ கரெக்ட் பண்ணிவிடுகிறார் சுந்தர்.ஆங்கிலத்தில் அதிகமாக பேசுவதால்
அவளுக்கும் கார்த்திக்கும் அடிக்கடி முட்டி கொள்கிறது.சுந்தர் மீதிருந்த தன பார்வையை கார்த்திக் பக்கம் திருப்புகிறார் யாமினி இதை புரிந்துகொண்ட கார்திக்,தன நண்பனுக்கு துரோகம் செய்வதாக எண்ணி
யாமிணியிடம் இருந்து விலகிபோகிறார்.ஒரு நாள் இருவர் மனதும் காதல் வயப்பட சொல்லி கொள்ளாமல் மைசூர் போகிறார் கார்த்திக்.அங்கிருந்து திரும்பி வரும்போது தன் நண்பனிடம் திட்டு வாங்கிவிட்டு வாஸ் ரூம் போகிறார் அவரை பின் தொடர்கிறார் யாமினி,அங்கே அவர்கள் காதலால் தழுவிக்கொள்ள
திடீரென அங்கு வரும் சுந்தருக்கு இவர்களின் காதல் வெளிச்சம் ஆகிறது.
அப்போது நண்பர்கள் இருவரும் பிரிய,சுந்தரின் அப்பா இருவருக்கும் தண்ணியை(டாஸ்மாக்)கொடுத்து அழுவவிட்டு சேர்த்து வைக்கிறார்.அப்போது கார்த்திக் யாமிநியிடம் இருந்து விலகி நண்பருடன் வீடியோ
கேம் விளையாடுகிறார்.அங்கு யாமினி வந்து கண்டிப்பாக கார்த்திக்கை சந்திக்க முயல,சுந்தரின் அப்பா கார்த்திக்கும் யாமிநிக்கும் மனம் முடித்து வைக்கிறார்.அங்கிருந்து தேனிலவு போன சமயம்,தான் வாய்ப்பு கேட்டு சென்ற போட்டோகிராபரிடம் கொடுத்த போட்டோவை அவர் தன் திறமையின்
விளம்பரத்திற்கு உபயோகித்து கொண்டார் என்று தெரிய வரும்போது மூணு மாடியில் இருந்து அப்டியே சரிந்து விழுகிறார்.
இப்போது கதை இரண்டு வருடம் கழித்து பயணிக்கிறது.முயற்சியின் விரக்தி கார்த்திக்கை ஒரு மன நலம் சரி இல்லாதவன் போல் மாற்றுகிறது.அப்போது அவள் மனைவி அவன் எடுத்த புகைப்படங்களை பிரபல பத்திரிக்கைகளுக்கு
அனுப்புகிறாள்.அதன் பின் அந்த ஏமாற்றிய திறமைசாலி டி.வி.யில் பேட்டி
கொடுக்க அதை போட்டு உடைக்கிறார் மனைவியை எட்டி உதைக்கிறார் அதில் யாமினிக்கு கர்ப்பம் கலைகிறது.
சிறிது நாள் கழித்து,யாமினி அனுப்பிய படங்களில் ஒரு யானை படம் ஒரு பிரபல பத்திரிக்கையில் அட்டை படமாக வர கார்த்திக்கின் திறமை உலகத்தின் வெளிச்சத்திற்கு வருகிறது.உலகின் மிகச் சிறந்த போட்டோகிராபராக கார்த்திக் தேர்ந்தேடுக்கப்படுகிறான்.அங்கே பேசும் கார்த்திக் தன் நண்பர்களுக்கு நன்றியை சொல்லி ஒன்றும் சொல்லாமல் சென்று திரும்பி தன் மனைவியை புகழ்ந்து பேசி அவளின் புகைப்படத்தை உலகிற்கு காமிக்கிறான்.அங்கிருந்து
யாமினிக்கு போன் போடும் கார்த்திக்கிடம் அவள் பேசாமல் மெளனமாக இருக்க,அப்போ சுந்தர் அவளிடம் பேச சொல்லி கெஞ்ச,அவள் போனை எடுத்து கொண்டு நகர...
எ பிலிம் பை செல்வராகவன்.
படத்தின் ஹைலைட்ஸ் :
கற்பனை கடவுள் கொடுக்கணும் தானா வராது என்று சொல்லி இன்னொருத்தரின் திறமையை திருடுவது.இந்த விஷயம் உலகில் அதிகமாக நடக்கும் ஒரு விஷயம்.
தன்னை லுக் விடும் யாமினியை பார்த்து,நீ எனக்கு சிஸ்டர் மாதிரின்னு கார்த்திக் சொல்வது.
உனக்கு திறமை இல்லை நீ வேற வேலை எதாச்சும் பாத்துக்கோ என்று சொல்லிய யாமிநியிடம் பிடிச்ச வேலை தான் செய்றேன்,நான் ஒரு பிச்சைகார போட்டோகிராபரா இருந்துட்டு போறேன் என கார்த்திக் சொல்வதும்.
அதற்கு முன்பு,ஒரு பாட்டியிடம் உன்ன படம் பிடிக்கட்ட என்று கேட்பதும்
பிடித்த படத்தை அவரிடம் காண்பிக்கும்போது அவர் அதை மறுப்பதும் பின்பு அவரே அவரின் கணவனிடம் சென்று என்ன எவ்ளோ அழகா படம் பிடிச்சிருக்கு என்பதும் அவர் அதை தனக்கு ஒரு காப்பி கேட்பதும்..செல்வராகவனின் மயக்கம் என்ன..ஹைக்கூ..!
யாமிநியிடம் உன் கணவன் ஒரு பைத்தியம் வீட்டை காலி பண்ணு என்று சொல்லும்போது யாமினி கொடுக்கும் பதிலும் அந்த நகைச்சுவையும் மிக அழகு.
குடிக்க கொடுத்து நண்பர்களை ஒன்று சேர்த்த விஷயம் பழசு தான் ஆனா இது கொஞ்சம் புதுசா இருக்கு.
கார்த்திக் ஒரு பைத்தியம்,நீ இன்னும் எவ்ளோ நாள் தான் கஷ்டப்படுவன்னு சொல்லும் கார்த்திக்கின் நண்பரிடம்,இது உன் தப்பில்ல என் தப்பு,நான் உங்கிட்ட அழுதுருக்க கூடாது.நீயும் ஒரு ஆம்பளை தானே என்று சொல்வதும்,நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணு உன் பொண்டாட்டிய நீ தான் தேடிக்கனும் அடுத்தவன்
பொண்டாட்டிய நீ தேட கூடாது,என் புருஷன் ஜீனியஸ் என யாமினி சொல்லுமிடம்...படத்தின் ஹை கிளாஸ் சீன்.
படத்தின் மைனஸ் :
வழக்கம் போல் செல்வாவின் இரண்டாம் பாதி எப்போதும் மெதுவாத்தான் நகரும் இதில் அது மாறாமல் கொடுத்திருக்கிறார்.
கர்ப்பம் கலையும் சீனின் நீளத்தை குறைத்திருக்கலாம் அவர்களின் நடிப்பு நன்றாக இருந்தாலும் பார்க்க பொறுமை இல்லை தலைவா..!
படத்தை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் அவரின் திறமையை உடனடியாக உலகிற்கு
பரப்பியது கொஞ்சமும் லாஜிக் இல்லை.
செல்வாவின் ஹீரோக்கள் அனைவரும் வெறி வந்தால் ஏன் கண்மூடித்தனமாக நடக்கிறார்கள்.
பெர்பார்மண்ஸ் :
தனுஷ் - தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்.ஆரம்பத்தில் ரிச்சாவிடம் மோதிகொள்வதும் பின் காதல் வயப்படுவதும்,நண்பனுக்காக விரட்டி அடிப்பதும் மீண்டும் அதே பெண்ணுடன்
மனம் முடிப்பதும்,தன் திறமையை நிரூபிக்க போராடும் நேரத்திலும் அதை திருடியவனிடம் போய் இது என்னோடது என கெஞ்சும் இடத்திலும் பின் அதனால் பாதிக்கப்பட்டு முயற்சியுடன் போராடும் போதும்
அப்ளாஸ் அள்ளுகிறார்.
ரிச்சா - படத்தின் பலமும் இவர் தான் பலவீனமும் இவர் தான்.பலம் - இவரின் நடிப்பு,பலவீனம் இவரின் சோக முகம் ( செல்வாவின் நாயகிகள் அப்டி தான் இருக்கணுமா என்ன..?)
சுந்தர் (இவர் பெயர் தெரியவில்லை) தனுஷின் நண்பனாக வரும் முதல் பாதியை தாங்கி பிடிக்கிறார்.என்னோட கேர்ள் பிரெண்ட மடக்கி கல்யாணம் பண்ணிகிடான் என புலம்புவதும் தனுஷை பார்க்கும்போது சிரிப்பதும்,
இறுதியில் அவர் மனைவி இது சுந்தர் வாங்கிய விருது என காமிக்கும்போது அவர் ரியாக்சன் சூப்பர். நாயகன் நண்பராக ஒரு ரவுண்டு வருவீங்க சுந்தர்.
படத்தின் அடுத்த ஹீரோ,வேற என்ன ஒளிப்பதிவு தான்.கதையில் புகைப்படம் வேறு கலந்திருப்பதால் இவருக்கு அதிக வேலை.அதை ராம்ஜியின் காமிரா சுற்றி சுழலடித்திருக்கிறது.நாமே இனிமே எதாச்சும் நல்ல படம் கிடைத்தால் உடனே நமது காமிரா எடுத்து படம் பிடிக்கும் ஆர்வத்தை கொண்டுவந்ததற்கு மிக்க நன்றி ராம்ஜி சார்.
படத்தின் இசை பற்றி எல்லோருக்கும் சொல்லவேண்டியதில்லை ஆனால் அதை எடுத்திருக்கும் விதம மிக அருமை ஓட ஓட முடியல பாட்டை அனிமேஷன் தனுஷுடன் ரசிக்க முடிந்தது,அட்ரா அவளை பாட்டை
திணிச்சிருந்தாலும் ரசிக்காம இருக்க முடியுமா?மற்ற பாடல்கள் கேட்கும்போது உள்ள ரசனை மட்டுமே.
படத்தின் வசனங்கள் கொஞ்சம் ஈர்த்தன.அவன் என்ன பெரிய கொம்பா,ஆமா ரொம்ப ரொம்ப பெரிய கொம்பு என்பதும்,உனக்கு ஆய்னா என்னனு தெர்யுமா?..என் புருஷன் லூசு இல்ல அவன் ஜீனியஸ்...சில எடுத்துகாட்டு..!
செல்வாவின் இயக்கத்திற்கு தான் நான் படம் பார்க்கவே போனேன்.ஒரு காதல்,ஒரு கனவு,அந்த கனவில் ஒரு சிதைவு அந்த சிதைவினால் ஏற்படும் பாதிப்பு அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வெல்லும் அந்த கனவு.இந்த கதையை மிக அழகாக ஒரு கவிதையாக சொல்ல இவரை தவிர யாரால் முடியும்.படத்தில் இரண்டாம் பாதியில் சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
மயக்கம் என்ன - மயக்கும் உங்களையும் கொஞ்சம் பொறுமையுடன் ரசித்தால்..!
No comments:
Post a Comment