என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Thursday, December 1, 2011

போராளி - சசிகுமார்,சமுத்திரகனியின் மற்றும் ஒரு வெற்றிப்பயணம்...!

போராளி - சசிகுமார்,சமுத்திரகனியின் மற்றும் ஒரு வெற்றிப்பயணம்...!


கதை
குமரனும் அவனது நண்பரும்(நரேஷ்) சென்னை அவனது நண்பனை தேடி வருகிறார்கள்.அவர்களுக்கு அங்கு ஒரு வேலை கிடைக்கிறது.அந்த வேலை போக மீதி நேரத்தில் ஏதாவது பகுதி வேலை செய்யலாம் என்று குமரன் யோசனை சொல்ல அங்குள்ள நால்வரும் சேர்ந்து "அவசர உதவிக்கு அணுகவும்,குறைந்த கட்டணம்"என்று விளம்பரம் செய்கிறார்கள்.அவர்களின் முயற்சி வெற்றி பெறவே அவர்கள் வேலை செய்யும் பெட்ரோல் பங்கில் இடம் கொடுத்து உற்சாகபடுத்துகிறார் அவர்களின் முதலாளி.அவசர புத்தியில் நரேஷும் கஞ்சா கருப்பும் போட்டோவுடன் விளம்பரம் கொடுக்க
குமரனை தேடி ஓர் கூட்டம் அங்கு வருகிறது அவர்கள் இவர்களை துரத்த,
இவர்கள் தப்பித்து விட.அது வரை நல்லவர்கள் என் பெயர் எடுத்த காலனியில் அந்த நண்பர்களை பைத்தியம் என்று வந்தவர்கள் அங்கே இருப்பவர்களிடம சொல்ல...அதோடு நிற்கிறது முதல் பாதி..!

இரண்டாம் பாதி...

குமரன்,ஓர் பெண்ணாசை பிடித்த தந்தையுடன் வாழும் தாயில்லா மகன்.அவன் தான் படிக்கும் பள்ளியில் அதிபுத்திசாளிதனமாய் இருக்கும் ஒரு மாணவன்.
அவன் கேட்கும் கேள்விக்கு வாத்தியாருக்கே பதில் தெரியாமல் குழம்பி அவனை வகுப்பை விட்டு விலக்கி வைக்கிறார்கள்.அவன் குடும்பத்திற்கு இது தெரிந்து போகவே அவனை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து வளர்க்கிறார் அவனது சித்தி (சித்தப்பாவின் மனைவி)அவளுக்கு இந்த சொத்தின் மீது ஆசை வரவே அவளது கணவனை தூண்டி விடுகிறார்.இங்கே அவனது தாத்தா
கொஞ்சும் பொறுக்கும் படி சொல்ல காலம் நகர்கிறது.

அதன் பின் அவன் தாத்தா இறந்து போகிறார்.குமரனின் தாத்தாவிற்கு சொந்தமான
நிலத்தில் யுரேனியம் இருப்பதை கண்டுபிடித்த ஒருவன் இவர்களிடம் அந்த நிலத்தை விலைக்கு கேட்க குமரனின் சித்தி அந்த இடத்தை விற்க முயற்சிகள் எடுக்க அவன் தாத்தா இந்த நிலத்தின் விற்கும் உரிமைகளை குமரன் மீது எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார் என்று எல்லோர்க்கும்
தெரிய வர,குமரன் வீட்டில் முன்பு வேலை பார்த்த ஒருவர் அவன் தாய் கொல்லப்பட்டதும் அவன் தாத்தா கொல்லப்பட்டதும் அவனிடம் சொல்லி உசுப்பி விட அவன் அவர்களை துவம்சம் செய்ய திரும்ப வந்து அவர்களிடம் மாட்டி கொள்ள அவர்கள் அவனை அடித்து துவைத்து இடத்தை
விற்க முயலும் போது பைத்தியம் போல் நடித்து குழப்பி விடுகிறான் குமரன்.அவனை மன நல காப்பகத்தில் கொண்டு சேர்த்து விடுகிறார்கள்.அவன் எங்கும் தப்பிக்காமல் இருக்க அவன் வீட்டில் இருந்தும் ஒருவன் அவனுடனே சேர்க்க படுகிறான்.குமரன் இருக்கும் காப்பகத்தில் நரேஷ் என்பவரும் இருக்கிறார் அவரின் பாதிப்பை கேட்டறிந்து கொள்ளும்
குமரன்.அவனை இழுத்து கொண்டு சென்னை போக (மேலே சொல்லப்பட்ட முதல் பாதி நடக்கிறது).

அங்கே தேடி வரும் தன் சொந்தங்கள் துரத்த...எதுவரை நாம் இனி ஓட முடியும்,
எதிர்த்து நின்று எல்லாரையும் அடித்து துவம்சம் செய்துவிடும போராளியின் கதை தான்
சசிகுமார்,சமுத்திரக்கனியின் இந்த 'போராளி'.

மனிதன் ஒரு சமுதாய மிருகம் - அரிஸ்டாட்டில் என்று படம் தொடங்கியது
அக்மார்க் சமுத்திரகனி ஸ்டைல்..!தீமைக்கும் நன்மை செய்,பெட்ரோல் விலையேற்றத்துடன் காட்டிய கால நகர்வு..இது போன்ற
பல குட்டி கவிதைகள் படத்தில்.

சென்னையில் ஒரு காலனி வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை
படவா கோபி அவர் மனைவி சாந்தியின் சண்டை,ஹவுஸ் ஓனர் கு.ஞானசம்பந்தன்,
அவசரத்தில் உதவி செய்யும் குடிகாரன் மூலமாக கண் முன் காட்டிருக்கிறார்.

படத்தின் மிக பெரிய ப்ளஸ் வேகமான திரைக்கதை.ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு என கியர் போட்டு
ஓடுகிறது திரைக்கதை..இரண்டாம் பாதியில் கொஞ்சம் வேகம் குறைத்து பின் அதிவேகம் கூட்டியதில் அப்ளாஸ் அள்ளுகிறார் சமுத்திரகனி.

படத்தின் வாசங்கள் தான் ஹை அப்ளாஸ் அள்ளுகிறது.
'முன்னாடி பின்னாடி தெரியாதவன் கூட நம்பலாம் ஆனா சொந்தக்காரன நம்பக்கூடாது.'
'உடம்புக்கு வர பிரச்னை கிட்ட வச்சிக்கிற நாம மனசுக்கு வர பிரச்சனைனா ஒதுக்கி வச்சிட்றோம்'
'எடுக்குற முடிவை முத ராத்திரிலேயே எடுங்கடா அப்புறமா சண்டை போட்டு யாரயும் கொல்லாதிங்க'
'இந்த காம்பவுன்ட்ல அவுங்கதான் நார்மல்'
'யாரையும் அடிமைபடுத்தவும் விரும்பல,அடிமையா இருக்கவும் விரும்பல'
'நீ தோத்தவன பாக்குற,நான் ஜெயச்சவன பாக்குறேன்'
'எப்பயோ கிடைக்குற பால்கோவாவ விட இப்போ கிடைக்குற மிட்டாய் தின்னா வாயாச்சும் இனிக்கும் டா' போன்றவை சில எடுத்துக்காட்டு.

காமிரா,கதை ஏற்ற சூழ்நிலையில் பயணிக்கிறது.

இசை,நாடோடிகள் படத்தில் கிடைத்த சம்போ சிவ சம்போ இல்லாத குறை தான்.
மற்றபடி பின்னணி இசையில் அப்படியே நாடோடிகள் சாயல் கொஞ்சம்.இரண்டாம் பாதியில் பாட்டு வைக்காமல் போனது,கதையை குழப்பாமல் நம்மிடம் சேர்க்கிறது.

சசிகுமார்,படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர்.ஹீரோவா இந்த படத்தில்
நன்றாகவே நடித்திருக்கிறார்.முடி வளர்த்து மிரட்டும் இடத்திலும்,வீரமாக எதிர்த்து நின்று ஆட்டிடம் முட்டு வாங்கும் போதும்,சென்னையில் தான் வாழுமிடம் சுற்றி நல்ல பெயர் வாங்கும் போதும்,சுவாதியிடம் "உனக்கு யாருமில்ல,எனக்கு எல்லாரும் இருந்தும் யாருமில்ல"என்று சொல்லி அழுமிடத்தில் கிளாப்ஸ் சசி..!

நரேஷ்,படத்தின் இரண்டாம் ஹீரோ என்றே சொல்லலாம்.வேலை செய்ய வந்த இடத்தில் கரெக்ட் பண்ணும பெண்ணிடம் சென்னை பாஷையில் திட்டு வாங்கும்போதும்,சம்பந்தப்பட்டவன் நான் தானடா என்று புலம்பும் போதும்,வியாதியால் துடிக்கும்போதும் இவரின் நடிப்பு பயங்கரம்.

சுவாதி தனக்கு கொடுக்க பட்டதை சரியாய் செய்திருக்கிறார்.சசிகுமார்,'நீ வேணும்னு வந்துட்ட,இனிமே நீயே வேணாம்னு சொன்னாலும் என்ன விட்டு போக முடியாதுனு' சொல்லுமிடத்தில் சுவாதியின் நடிப்பு ஒரு தனி அழகாய் தெரிந்தது.

போராளியை பார்ப்பவர்கள் கண்டிப்பாக மறக்க முடியாத சிறிய கதாப்பாத்திரம்
வசுந்தராவுக்கு சொந்தம்.இவரின் வீராமான நடிப்பு கண்டிப்பாக ரசிக்க முடிந்தது.

சூரி,இவரை காமிக்கும்போது பரோட்டானு கத்தினார்கள் சில இளசுகள்.படத்தில் நகைச்சுவை பாத்திரம் கஞ்சா கருப்பை விட இவருக்கு தான் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது.'நாங்க அப்போவே அந்த மாறி இப்போ சொல்லவா வேணும்'னு சொல்லுமிடமெல்லாம் செம சிரிப்ப்பு.

கஞ்சா கருப்பு..நாடோடிகள் போல அதே கதாபாத்திரம் தான்.இவர் புலி வேஷம்
போட்டு ஆடும்போது புலி உருமுது பாட்டை போட்டது செம காமெடி.கரடி வேஷம் போட்டு கொண்டு போலீசில் மாட்டிக்கொண்டு இவர் வாங்கும் அடி காமெடி இடி.

அதோடு விடாமல் கிளைமாக்ஸ்-இல் நரேஷை தேடி ஒரு தெலுங்கு கும்பல் வந்து நிற்க..இது யாருனே எனக்கு தெரியாது என்று இவர் சொல்ல,அந்த போட்டோ விளம்பரத்தை காண்பித்து படத்தின் எண்டு கார்டு போடுவது...செம ரகளை..!

மொத்தத்தில் வேகமான இன்னொரு திரைக்கதையுடன் நம்மை ரொம்பவே ஈர்க்கிறார் சமுத்திரகனி..!

போராளி - போராடி ஜெயித்த சசிகுமார்,சமுத்திரகனிக்கு வாழ்த்துக்கள்.

படம் முடிஞ்சு வெளிய வரும்போது ஒருத்தன் படம் போனதே தெரில மச்சான்னு சொன்னான் இது தான் 'போராளி' வெற்றியின் அறிகுறி..!

7 comments:

  1. விமர்சனம் அருமை. படம் பார்க்க தூண்டும் வகையில் உள்ளது.


    எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
    வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

    ReplyDelete
  2. vimarsanam super anna kandipa intha padam parkanum.................

    ReplyDelete
  3. அப்போ பாத்துடுவோம்.....
    படம் நல்லா இருக்கனும்,
    அதுக்கு நீங்கதான் ஜவாப்தாரி!

    ReplyDelete
  4. imm nallathan solluriga

    ReplyDelete
  5. http://senshe-kathalan.blogspot.com/2011/12/blog-post.html

    ReplyDelete
  6. போராளி - ஏதோ சமூக நலனுக்காக போராடும் கேரக்டர் அப்படீன்னு உயர்வா நினைச்சிருந்தேன்.தன்னை மனநிலை மருத்துவ மனையில் சேர்க்க துரத்தும் கூட்டத்திடம் தப்பிக்க போராடும் போராளியா..என்ன கொடுமை சார்!

    ReplyDelete
  7. http://cablesankar.blogspot.com/2011/12/blog-post_02.html

    ReplyDelete