இறைவன்
நிலவினில் அழகினை கொடுத்தன் காரணம்
தன் துணை அதைவிட அழகென்று
தெரியத்தான்;
நட்சத்திரத்தில் ஒளியினை கொடுத்ததன் காரணம்
செயற்கைத்துணைக் கொண்டவரை இயற்கையின்
வெளிச்சம் காட்டத் தான்;
உலகாசை அதிகம் கொண்ட மனிதர்க்கு
பாடம் புகட்டத்தான்
மேகம் நிலவினை மறைக்கிறது
அதன் காரணம்
எதுவும் நிலையல்லவே!
கனவினில் நிஜங்களை உணர்வதனால்
நிஜங்களை கனவாக மாற்ற முடியாது
காரணம்
இது நிழல்படமில்லாத நிஜப்படம்;
உறங்கும் நேரம் மரணத்தை உணர்ந்துகொள்
அதன் பயம் உன்னிடமிருந்து குறையும்;
இரவுகள் கற்றுக்கொடுக்கும் ஓரே பாடம்
உலகத்தில் மாற்றங்கள் அனைத்தும் பொதுவானது;
ஒய்வெடுக்கும் நேரத்தில் இந்த கவித்தோழன் தாலாட்ட
உறங்கிடு என் தோழியே!
- ஷேக் இப்ராஹிம்
//இரவுகள் கற்றுக்கொடுக்கும் ஓரே பாடம்
ReplyDeleteஉலகத்தில் மாற்றங்கள் அனைத்தும் பொதுவானது;//
யெஸ்..
/இது நிழல்படமில்லாத நிஜப்படம்//
ReplyDeleteஅழகான கவிதை